தளபதி விஜய் சொன்னதை தற்போது வரை கடைபிடித்து கொண்டு இருக்கும் வானத்தை போல சீரியல் நடிகர்! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தமன் குமார்.

 

இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் சின்ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும் இந்த தொடரின் மூலம் பிரபலமாகியுள்ள தமன் குமார் நடிப்பில் ஒரு சில திரைப்படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் தமன் தளபதி விஜய் தன்னிடம் கூறிய ஆலோசனை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “சட்டம் ஒரு இருட்டறை படப்பிடிப்பின்போது சண்டைக்காட்சியில் எனக்கு காலில் காயம்பட்டிருந்தது. 

 

அந்த சமயத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த விஜய் சார் என்னிடம் வந்து அக்கறையாக விசாரித்ததுடன் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறினார்.

 

மேலும் அந்த படம் ரிலீசானபோது, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் சார், என்னை அழைத்து, எனது நடிப்பு பற்றி பாராட்டி பேசியதுடன், ஒரு நடிகனாக எப்படி முன்னோக்கி செல்லவேண்டும் என சில ஆலோசனைகளையும் வழங்கினார். அவர் கூறியவற்றை இப்போதுவரை பின்பற்றி  வருகிறேன்” என்றார் தமன்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*