ஸ்டாலின் கையில் குழந்தையாக பேரன்… அடையாளம் தெரியாமல் நிற்கும் உதயநிதி! வைரலாகும் அரிய புகைப்படம்

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி தனது இன்ஷ்டாகிராமில் பதிவிட்டுள்ள குடும்ப புகைப்படம் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.

 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து நடிகரானார்.

 

தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியினைப் பெற்று தனது தொகுதி மக்களை சந்தித்து, அவர்களின் தேவையையும் உதயநிதி செய்து வருகின்றார்.

 

இவரது மனைவி கிருத்திகா இயக்குனராக வலம் வருகின்றார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் இருக்கிறார்கள்.

 

இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது நான்கு தலைமுறை படத்தைப் பகிர்ந்துக் கொண்டார் இன்பா.

 

அதில் கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என நான்கு தலைமுறையினர் இடம் பெற்றிருந்தனர். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Inban Udhayanidhi (@inban_udhayanidhi)


Post a Comment

CAPTCHA
Refresh

*