திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கவரும் பிரபல நடிகை ஸ்ரிதிகா – எந்த சீரியலில் தெரியுமா

நாதஸ்வரம் சீரியல் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியவர் நடிகை ஸ்ரிதிகா.

 

இதற்கு முன் கலசம், கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

 

இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல், வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

ஸ்ரிதிகா நடிப்பில் கடைசியாக கல்யாண பரிசு 2 சீரியல் ஒளிபபராகி வந்தது.

 

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் தற்போது மகராசி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறாராம் நடிகை ஸ்ரிதிகா.

 

இந்த தகவல் ஸ்ரிதிகாவின் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியாக அமைத்துள்ளது.   

 


Post a Comment

CAPTCHA
Refresh

*