பூவே போச்சுடவா சீரியலில் இருந்து விலகினாரா நடிகை ரேஷ்மா? இது குறித்து அவரே அளித்த விளக்கம்!

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பூவே பூச்சூடவா, இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

 

இந்த தொடரில் அவர் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியுள்ளார் ரேஷ்மா. 

 

இந்நிலையில் ரேஷ்மா இந்த தொடரில் இருந்து விலகியதாகவும், இனி வரும் எபிசொட்களில் இவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடிப்பதாகவும் தகவல் பரவி வந்தது.

 

மேலும் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ரேஷ்மா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் “பூவ் பூச்சுடவா சீரியலில் இருந்து விலகியதாகவும், நான் வேறொரு நடிகரால் மாற்றப்படுவேன் என்று வதந்தி பரவுகிறது.

 

ஆனால் அது முற்றிலும் ஒரு போலியான செய்தி, கவலைப்பட வேண்டாம் நான் திரும்பி வருவேன், வதந்திகளை பரப்பாதீர்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*