நடிகர் விஜய் நடித்த இந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி பட தலைப்பு! சுரஸ்யமான தகவல்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 

அந்த வகையில் தற்போது இவர் நடித்து வந்த தளபதி 65 திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இவர் நடிப்பில் இயக்குனர் A.L. விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தலைவா. இப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்திருந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக இப்படம் உள்ளது.

 

இந்நிலையில் இயக்குனர் A.L. விஜய் அளித்த பேட்டியில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.ஆம் இப்படத்திற்கு முதலில் தளபதி என்று தான் தலைப்பு வைப்பதாக இருந்தார்களாம்.

 

இதன்பின் இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்த A.L.விஜய்யிடம் அவர் சில அறிவுரைகளை கூறினாராம். இதனால் இப்படத்திற்கு தலைவா என தலைப்பு வைத்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*