திருமணத்திற்கு தயார் ஆன நடிகை அஞ்சலி.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு படத்தின் மூலம் அறிமுகமானவார் அஞ்சலி. அதற்கு முன்பு படங்களில் நடித்து இருந்தாலும் அங்காடி தெரு படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதன் மூலம் அதன் பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்கதுவங்கியது.

 

அதன்பின்னர், காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும், இருவரும் ஊர் சுற்றி வருவதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தது.

 

இதனையடுத்து, சமீபகாலமாக அஞ்சலிக்கு எந்த படவாய்ப்புகளும் இல்லாமல் இருக்கின்றது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் காதலித்தது உண்மை. இருப்பினும், அந்த காதல் கைகூடவில்லை. அது தோல்வியில் தான் முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

 

ஆனால் தனது காதலர் யார் என்பது குறித்து அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், அஞ்சலிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் ஐதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மாப்பிள்ளை குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளிவருகின்றது. அவர் ஒரு தெலுங்கு நடிகராக இருக்கலாம் என்றும் அல்லது தொழிலதிபராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

ஆனால், திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்புக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவல்கள் குறித்து அஞ்சலி இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடவில்லை….

 


Post a Comment

CAPTCHA
Refresh

*