ஐந்தாவது முறையாக விஜய் சேதுபதியின் படத்தை இயக்கும், தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்..! வெளியான மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர் தான் விஜய் சேதுபதி.

 

இவர் கடைசியாக விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார், அப்படமும் மிக பெரிய வெற்றியடைந்தது.

 

இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பின் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் அப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். 


Post a Comment

CAPTCHA
Refresh

*