ரோஜா சீரியலில் வரப்போகும் அதிரடி மாற்றம்! இவர் தான் புது வில்லியாம்?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தற்போது வரை டாப் ரேட்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறது.

 

விபத்தில் மூன்று வயது குழந்தை  அனு தன்னுடைய தாய், தந்தையை இழந்து அனாதையாக ஆசிரமத்தில் வளர்கிறது.

 

ஒரு கட்டத்தில் தன்னுடைய மாமன் மகனையே திருமணம் செய்து கொண்டு, வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசிக்கத் தொடங்க பல்வேறு பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.

 

தன்னுடன் ஆசிரமத்தில் வளர்ந்த பிரியா என்ற பெண், தான் அனு என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து அடாவடியை தொடங்குகிறார்.

 

செண்பகத்தின் மகள் நான் தான் என கூறிக்கொண்டு, ரோஜாவுக்கு தொல்லை கொடுக்க தொடங்குகிறார்.

 

ஒவ்வொரு எபிசோடும் சுவாரசியம் குறையாமல், பல டுவிட்ஸ்களுடன் ஒளிபரப்பாகி வருகிவதால் டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் தற்போது கர்ப்பமாக இருக்கும் ஷாமிலி (அனு – வில்லி) சீரியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார்.

 

எனவே தற்போது புது வில்லியாக ஏற்கனவே அனு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யாக நடிக்கவிருக்கிறாராம்.

 

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

CAPTCHA
Refresh

*