அப்பாவானார் பிக்பாஸ் மகத்.. என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மகத். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார்.

 

இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இதனிடையே, மகத், பிராச்சி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

 

மேலும், மகத்தின் மனைவி தற்போது கர்ப்பமாக இருந்த நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மகத் அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த பதிவில், பிராச்சி மற்றும் குழந்தையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த மகத், “கடவுள் இன்று காலை ஒரு அழகான ஆண் குழந்தையை எங்களுக்கு ஆசீர்வதித்தார்! இந்த மகிழ்ச்சியால் பிராச்சியும் நானும் மகிழ்ச்சியடைகிறோம்.

 

உங்கள் அன்பு மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைத்திற்கும் நன்றி. அப்பாவாக இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahat Raghavendra (@mahatofficial)


Post a Comment

CAPTCHA
Refresh

*