மிஷ்கின் படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி – கசிந்த தகவல்

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பிசாசு.

 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

 

மேலும் இப்படத்தில் நடிக்க பூர்ணா, ‘சைகோ’ பட வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

 

பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்த இயக்குனர் மிஷ்கின்.

 

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாகவும் அவரே கூறி இருந்தார்.

 

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேய் ஓட்டும் நபராக நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*