By June 18, 20210 CommentsReport

நஸ்ரியவிடம் எனது காதலை இப்படி தான் வெளிப்படுத்தினேன்” – நடிகர் ஃபகத் பாசில் சொன்ன ரகசியம்

நடிகை நஸ்ரியா நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் தனது கியூட்டான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.

 

மேலும் அதன்பின் பிரபல மலையாள நடிகரான ஃபகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா நடிப்பில் இருந்து விலகி இருந்தார்.

 

இந்நிலையில் நடிகர் ஃபகத் பாசில் நஸ்ரியாவிடம் தனது காதலை தெரிவித்தது குறித்து பேஸ் புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் “பெங்களூர் டேஸ் திரைப்படத்தில் நடிக்கும்போதுதான் நஸ்ரியாவுடன் எனது பயணம் ஆரம்பமானது. அவரிடம் மோதிரத்துடன் ஒரு கடிதம் எழுதி காதலை வெளிப்படுத்தினேன்.

 

அதற்கு நஸ்ரியா “ஓகே” என்று சொல்லவில்லை. ஆனால் “நோ”என்றும் சொல்லவில்லை. நஸ்ரியாவின் விடாமுயற்சியாலேயே எங்கள் காதல் திருமணம் வரை வந்தது” என கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*