By June 27, 20210 CommentsReport

ஜீன்ஸ் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர் தானாம்.. பிரஷாந்த் கிடையாதாம்

பிரமாண்ட இயக்கத்தில் சங்கர் இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீன்ஸ்.

 

இப்படத்தில் பிரஷாந்தனுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார்.

 

மேலும் நாசர், செந்தில், லட்சுமி, ராதிகா உள்ளிட்ட திரையுலக பட்டாளமே நடித்திருந்தது. 1998ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது பிரஷாந்த் கிடையாதாம். ஆம் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது தல அஜித் தானாம்.

 

சில காரணங்களால் இப்படத்தில் அஜித்தால் நடிக்க முடியாமல் போனதினால், அதன்பின் பிரஷாந்த் தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றனர். 


Post a Comment

CAPTCHA
Refresh

*