By June 27, 20210 CommentsReport

கார்த்தியை தொடர்ந்து பல நடிகருக்கு வில்லனாகும் பிரமாண்ட பட நடிகர்.. யார் தெரியுமா

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எப்.

 

இந்த படத்தில் கருடா ராம் என்ற மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் ராமச்சந்திர ராஜு.

 

இதை தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார்.

 

இந்நிலையில் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் படத்தில் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

 

மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 


Post a Comment

CAPTCHA
Refresh

*