By June 28, 20210 CommentsReport

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.

 

இபபடத்தில் சிவர்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், அர்ச்சனா, தீபா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

 

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ‘டாக்டர்’ படத்தை நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Post a Comment

CAPTCHA
Refresh

*