By June 28, 20210 CommentsReport

மீண்டும் சிம்பு இயக்கத்தில் ஒரு படம் வேண்டும் – பிரபல முன்னணி இயக்குனர் பதிவு

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு.

 

நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு ‘மன்மதன்’, 2006 ஆம் ஆண்டு ‘வல்லவன்’ படங்களை இயக்கினார் சிம்பு. இரண்டு படங்களும் வெற்றிபெற்றது.

 

அதே போல் இப்படத்தில் இடம்பெற்று இருந்த, யுவன் சங்கர் ராஜாவின் இசையின் இளைஞர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டானது.

 

மன்மதன், வல்லவன், வானம், சிலம்பாட்டம் படங்களை தொடர்ந்து தற்போது தான் சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா மாநாடு படத்திற்காக இணைந்துள்ளனர்.

 

சமீபத்தில் இப்படத்தின், முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதற்காக யுவன் ஷங்கர் ராஜா சிம்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

 

இதில் பதிவின் கமெண்டில் ப்ரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ” மன்மதன், வல்லவன் போன்ற யுவன் ஷங்கர் ராஜா இசையுடன் சிம்பு இயக்கும் ஒரு படத்தை பார்க்க விரும்புகிறேன். உங்கள் படைப்புக்கு ஒரு சிறிய ரசிகரிடமிருந்து ஒரு சிறிய வேண்டுகோள்’ என்று பதிவு செய்துள்ளார். 


Post a Comment

CAPTCHA
Refresh

*