By June 28, 20210 CommentsReport

வரதட்சணைக்கு கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் மோகன்லால் – அதிரடியான பதிவு

கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண்னின் உயிர் பறிபோனது. இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை இந்தியளவில் ஏற்படுத்தியது.

 

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும் கேரள மாநிலம் முழுக்க எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

 

இந்நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 இதில் “பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு’ என்று அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆராட்டு’ படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு” வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள்.

 

பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்” என்று அழுத்தமுடன் வரதட்சணைக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*