அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இவ்வளவு கோடியா?

ஹிந்தி சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து தயாரிப்பாளராக கலக்கி வருபவர் போனி கபூர்.

 

இவர் தயாரித்த பல படங்கள் மெகா ஹிட் வரிசையில் உள்ளது. இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் ஆவார்.

 

தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார், அப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார்.

 

இங்கு மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்களை ரீமேக் செய்து அங்கேயும் தயாரிப்பாளராக களமிறங்கினார். 

 

இப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் படங்கள் தயாரித்து வரும் போனி கபூர் பல கோடி சொத்துகளுக்கு உரிமையாளராக உள்ளார்.

 

அவரது சொத்து மதிப்பு மட்டும் $500 மில்லியன் என கூறப்படுகிறது, இந்த விவரம் 2021ல் கணித்து வெளிவந்த தகவலாகும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*