ரிலீஸ் முன்பே சாதனை செய்த அஜித்தின் வலிமை படம்- கொண்டாடும் ரசிகர்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ தொடங்கியது, ஆனால் கொரோனா நோய் தொற்று பிரச்சனையால்  படத்தின் படப்பிடிப்பு இடைவேளை விட்டு விட்டு நடந்தது.

 

தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாகவும் ஃபஸ்ட் லுக்கும் வந்துவிடும் என்கின்றனர்.

 

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறதாம்.

 

படமே இன்னும் தயாராகவில்லை அதற்குள் வலிமை பெரிய சாதனை ஒன்று செய்துள்ளது. புக் மை ஷோவில் (ஆன்லைன் மூவி டிக்கெட் தளம்) 1 மில்லியனுக்கும் அதிகமான பேர் வலிமை படம் காண ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

படத்தின் ஃபஸ்ட் லுக்கோ, டீஸரோ எதுவும் வெளிவராத நிலையில் ரசிகர்களின் இவ்வளவு பெரிய ஆதரவை பெற்று சாதனை படைத்திருப்பது வலிமை படம் தான்.

 

இதனை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*