D43 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியான புதிய தகவல்

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கர்ணன் திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

 

அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் நேரடியாக Netfilx-ல் வெளியாகி கலவையான விமர்சங்களையே அதிகமாக பெற்றது.

 

மேலும் அடுத்தடுத்து The Gray Man, நானே வருவேன், D43 உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து முடிக்கவுள்ளார் நடிகர் தனுஷ்.

 

இந்நிலையில் தனுஷ் தற்போது D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார், இப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார்.

 

மேலும் தற்போது இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் அன்று D43 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*