இன்ஸ்டாகிராமில் வந்த தவறான மெசேஜ்.. புகார் அளித்த சனம் ஷெட்டி

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை சனம் ஷெட்டி. தமிழில் அம்புலி, மாயை, விலாசம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

 

இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தனது வாட்ஸ்அப் நம்பர் மற்றும்இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பி வருவதாக சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து அடையார் சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு ஆபாச மெசேஜ் வந்த வாட்ஸ்அப் எண், இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளிட்ட பிற ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார்.

 

இதனையடுத்து, இது தொடர்பாக அடையார் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது. 


Post a Comment

CAPTCHA
Refresh

*