அஜித்தின் வலிமை ஃபஸ்ட் லுக் வரும் முன்பே இப்படியொரு சாதனை செய்துவிட்டதே- கொண்டாடும் ரசிகர்கள்

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை படம் தயாராகி வருகிறது. இரண்டாவது முறையாக இவர்கள் இணைந்து படம் உருவாக்குகின்றனர்.

 

படத்திற்கான படப்பிடிப்பே இன்னும் மீதம் உள்ளது, காரணம் கொரோனா நோய் தொற்று. முதலில் நடித்த நடிகர்கள் இன்னும் சில காட்சிகளில் நடிக்க அழைத்தால் கொரோனாவால் வர முடியாது என்று கூறி இருக்கின்றனர்.

 

இதனால் புது கலைஞர்களை வைத்து படப்பிடிப்பு நடக்கிறது. தற்போது ஹைதராபாத்தில் வலிமை படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

இன்னும் படத்தின் ஃபஸ்ட் லுக் கூட வெளியாகவில்லை, அதற்குள் படம் ஒரு சாதனை செய்துள்ளது.

 

அதாவது படத்தின் ரைட்ஸ், சாட்டிலைட், டிஜிட்டல் என மொத்தமாக படத்திற்கான விஷயங்கள் அனைத்தும் இதற்குள்ளேயே விற்கப்பட்டுவிட்டதாம்.

 

இந்த தகவல் ரசிகர்களுக்கு தெரியவர கொண்டாட்டத்தில் உள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*