ஓடிடி-யில் ரிலீசாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் படம் – வெளியான ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இவருடைய தயாரிப்பில் வெளியான இரு திரைப்படங்களும் வெற்றிகண்டுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 3வது படம் ‘வாழ்’. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார்.

 

இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

 

இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 16ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*