ஆர்யா-விஷாலுக்கு பதிலாக அவன் இவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்களா?

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் படங்கள் தனியாக தெரியும். அப்படி படங்கள் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் பாலா.

 

இவர் படங்கள் பார்ப்பவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவரது இயக்கத்தில் தான் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்தார்.

 

ஆனால் ஏதோ பிரச்சனை காரணமாக மீண்டும் இப்படம் புதிய இயக்குனர் இயக்கத்தில் புதிதாக தயாரானது. அடுத்து பாலா என்ன படம் யாரை வைத்து இயக்குவார் என எதுவும் உறுதியாகவில்லை.

 

பாலா இயக்கத்தில் உருவான படங்களில் ஒன்று ஆர்யா-விஷால் நடித்த அவன் இவன். நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படத்தில் முதலில் நிஜ அண்ணன்-தம்பி நடிகர்களை தான் பாலா நடிக்க வைக்க முடிவு செய்தாராம்.

 

சூர்யா-கார்த்தி, ஜீவா-ஜித்தன் ரமேஷ் என நடிகர்களை தேர்வு செய்தாராம், ஆனால் அது சரியாக வரவில்லை. எனவே இறுதியில் ஆர்யா-விஷால் தேர்வாக அவர்கள் நடிப்பில் படம் தயாராகி வெளியாகி இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*