காதலரை மணக்கும் சோனம் கபூர்..!!

பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம்கபூர் 2008 ஆம் ஆண்டு சாவாரியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் இவர் நடிகர் தனுஷின் முதல் இந்தி திரைப்படமான ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 32 வயதான நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் பற்றி தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் தற்போது அவரது குடும்பத்தினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில் சோனம் கபூர்-ஆனந்த் அகுஜாவின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். வருகிற 8-ந் தேதி மும்பையில் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. நாங்கள் இந்த சிறப்பான தருணத்தை உற்சாகமாக கொண்டாட உள்ளோம். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆசிர்வாதத்திற்கும் நன்றி. இந்த விழா குடும்பத்தினருக்கு மிக நெருக்கமான ஒன்று என்றும் கூறியுள்ளனர்.

மேலும் மும்பையில் Bandstand பகுதியில் உள்ள ஒரு பாரம்பரிய பங்களாவில் திருமணம் நடைபெறும் என்றும் 5 ஸ்டார் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*