எம்ஜிஆர் படத்தில் அக்‌ஷரா

எம்ஜிஆரைக் கதாநாயகனாகக்கொண்டு உருவாகும் அனிமேஷன் படமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தில் நடிக்க நடிகை அக்‌ஷரா கவுடா ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் விஜய்யின் ’துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமான அக்‌ஷரா கவுடா, அஜித்தின் ’ஆரம்பம்’ படத்திலும் நடித்தார். மேலும் ‘போகன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து தனி கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து ‘மாயவன்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். மேலும் கடந்த ஆண்டு இந்திய மேலாண்மை நிறுவனங்களான KWAN என்டர்டெயின்மென்ட் & மார்க்கெட்டிங் சொலூஷன்ஸ் மற்றும் CAA (Creative Artists Agency) ஆகியோரிடம் நிர்வாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த இரண்டு நிறுவனங்களும் புதிய பட வாய்ப்புகள் மற்றும் கால்ஷீட் வழங்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது இவர் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரது கதாபாத்திரம் குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1973ஆம் ஆண்டு எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதையடுத்து ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற இந்தப் படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து, அதில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் அது நிறைவேறாமல் போக தற்போது அதே பெயரில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் பிரபு தேவா ஸ்டுடியோஸ் இணைந்து அனிமேஷன் தொழில்நுட்பத்தில் ‬இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இயக்குநர் அருண் மூர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். மேலும் வைரமுத்து இந்தப் படத்துக்கான பாடல்களை எழுதுகிறார். நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் உட்பட பல பழம்பெரும் நடிகர்கள் அனிமேஷனில் இடம்பெறவுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*