காதலரை 2 முறை திருமணம் செய்த நடிகை மேக்னா..!!

‘காதல் சொல்லவந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மேக்னா. பின்னர் ‘உயர்திரு 420’ படத்தில் நடித்தார். கன்னட நடிகையான இவர் தற்போது கன்னட, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அர்ஜுனின் அண்ணன் மகனும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவை மேக்னா காதலித்து வந்தார். இவரை 10 ஆண்டுகளாக மேக்னாவுக்கு தெரியும். என்றாலும், கடந்த 5 ஆண்டுளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

பெற்றோர்கள் சம்மத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் கடந்த மாதம் 30-ந் தேதி, இந்த மாதம் 2-ந்தேதி ஆகிய நாட்களில் நடந்தன. மேக்னா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். எனவே, ஏப்ரல் 30-ந் தேதி பெங்களூரில் கிறிஸ்தவ முறைப்படி சிரஞ்சீவி சார்ஜா-மேக்னா திருமணம் நடந்தது. இந்த மாதம் 2-ந் தேதி இந்து முறைப்படி நடந்து இருக்கிறது. இதன் மூலம் மேக்னா, தனது காதலர் சிரஞ்சீவி சார்ஜாவை 2 முறை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

மணமக்களை திரைஉலக பிரபலங்கள் நேரில் வாழ்த்தினார்கள். அர்ஜுன், குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். #Chiru #MeghanaRaj


Post a Comment

CAPTCHA
Refresh

*