டிக் டிக் டிக்: ரிலீஸ் அப்டேட்..!!

மிருதன் பட இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டிக் டிக் டிக் திரைப்படம் மே 22ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முதல் விண்வெளித் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியாகும் டிக் டிக் டிக் போதும் போதும் என்ற அளவுக்குத் தனது ரிலீஸைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறது.

ஜெயம் ரவி ஆக்‌ஷனில் கலக்குவது புதிதில்லை. ஆனால், இந்தப் படத்தில் அவருடன் இணைந்திருக்கும் நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவிக்கு சமமாக ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறாராம். இதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் சமீபத்திய ஹாட் டாப்பிக். மிருதன் படம் போலவே எதிர்பார்க்காத பல சுவாரசியங்கள் இதில் இருக்குமென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்களே மே 22ஆம் தேதி டிக் டிக் டிக் வந்தடைகிறது.


Posted in: CINEMA


Post a Comment

CAPTCHA
Refresh

*