நடிகையர் திலகம் ரிலீஸில் மாற்றம்..!!
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் நடிகையர் திலகம் திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரான இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார். தெலுங்கில் மகாநதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா பத்திரிகையாளராக நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி படம் மூலம் கவனம் பெற்ற விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஷாலினி பாண்டே சாவித்திரியின் தோழி ஜமுனா கதாபாத்திரத்தில் வலம்வருகிறார். ‘வைஜெயந்தி மூவீஸ் – ஸ்வப்ன சினிமா’ நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இந்தப் படம் இரு மொழிகளிலும் மே 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தெலுங்கில் திட்டமிட்டபடி 9ஆம் தேதியிலும் தமிழில் இரு நாள்கள் கழித்து 11ஆம் தேதியிலும் வெளியாகவுள்ளது.
மிக்கி.ஜே.மேயர் இசையமைத்துள்ள இதற்கு டேனி சஞ்செஸ்-லோபெஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. தணிக்கை துறையினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.