முதன்முறையாக டப்பிங் பேசிய ரெஜினா..!!
தமிழில் பல படங்களில் நடித்துவரும் நடிகை ரெஜினா, முதன்முறையாகத் தன்னுடைய படம் ஒன்றிற்கு டப்பிங் பேசியுள்ளார்.
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி, மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. இந்த நிலையில் மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக தமிழில் முதன்முறையாக டப்பிங் பேசியுள்ளார்.
தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் திரைக்கதையில் புதுமை செய்ய விரும்பும் இயக்குநர் திரு, மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் அப்பா, மகனான கார்த்திக்கையும் கௌதம் கார்த்திக்கையும் முதன்முறையாக இணைத்திருக்கிறார். தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் ரெஜினாவையும் முதன்முறையாக டப்பிங் பேசவைத்திருக்கிறார்.
சாம் சிஎஸ் இசையில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.