சமந்தாவின் கருணை..!!

தமிழ், தெலுங்கு சினிமாவுலகில் முன்னணி நாயகியாக வலம்வரும் சமந்தா, சினிமாவைத் தாண்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சேவை செய்து வருகிறார்.

சமந்தா கிராமத்துப் பெண்ணாக நடித்த ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக அவர் நடித்திருக்கும் நடிகையர் திலகமும், இரும்புத்திரையும் ஒரே தேதியில் (மே 11) ரிலீஸாக உள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் ஜோடியாக சீமராஜா படத்தில் நடித்து முடித்ததோடு, சூப்பர் டீலக்ஸ், கன்னட திரைப்படமான யு-டர்ன் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

சமந்தா சினிமாவைத் தவிர, மாடலிங், கடை திறப்பு விழாக்கள் உள்ளிட்டவற்றிலும் பங்கேற்று வருகிறார். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தனது பிரத்யுஷா டிரஸ்ட்டுக்கு வழங்கி வருகிறார். கொடிய நோய்களின் பாதிப்புக்குள்ளான ஆதரவற்ற குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணத்துக்குப் பிறகும் தனது சேவையைத் தொடர்ந்து செய்துவரும் சமந்தாவுக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.


Post a Comment

CAPTCHA
Refresh

*