செம போதை ஆகாத: ரிலீஸ் பிளான்

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘செம போதை ஆகாத’ படத்தின் வெளியீடு குறித்த தகவலைப் படக்குழு அறிவித்துள்ளது.

அதர்வாவுக்கு ஜோடியாக அனைக்கா, சக்ரபோதி ஆகியோர் நடித்துள்ள `செம போத ஆகாத’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் கடந்த ஆண்டே வெளியாகி கவனம் பெற்றது. ஆறு மாதங்கள் கழித்து தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே 18ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிக் அஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதுதவிர அதர்வா நடிப்பில் ஒத்தைக்கு ஒத்தை, ருக்மணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், பூமாரங் ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*