இயக்குநரான அக்‌ஷயா..!!

ஆர்யா நடித்த கலாபக் காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை அக்‌ஷயா தற்போது இயக்குநராகியிருக்கிறார்.

கலாபக் காதலன், எங்கள் ஆசான், உளியின் ஓசை, உயர்திரு 420 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அக்‌ஷயா. தற்போது நடிப்பைத் தாண்டி இயக்குநராகவும் உருவெடுத்திருக்கிறார். யாளி என்ற படத்தை இயக்குவதோடு கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் அக்‌ஷயா. தமன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஊர்வசி, மனோபாலா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

​இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 5) நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அக்‌ஷயா, “பெண் இயக்குநர்களுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன். இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை. முக்கியமான மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி திரைக்கதை நகரும். விறுவிறுப்பான திரைக்கதை ரசிக்கும்படியாக இருக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு மும்பை, மலேசியா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. ஜூன் மாதம் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*