பிரியாமணியை புகழும் ஸ்ருதி..!!

சினிமாத் துறையில் இருக்கும் நடிகைகளில் அற்புதமான நடிகையாக பிரியாமணி மாறியுள்ளதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாராட்டியுள்ளார்.

திரையுலகைப் பொறுத்தவரையில் முன்பெல்லாம் இரு நடிகைகள் பற்றி பேசினாலே, அவர்களுக்குள் இருக்கும் சண்டைகளும் பிரச்சினைகளும்தான் அதிகம் பேசப்படும். ஆனால் இன்றைய தலைமுறை நடிகைகளிடம் அந்தப் போக்கு மெல்ல மெல்ல மாறிவருகிறது. நடிகைகள் பலர் உண்மையில் ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்துவருகின்றனர். இதை ரசிகர்களுக்குக் கொண்டுசெல்லும் வேலையை இன்றைய சமூக வலைதளங்கள் செய்துகொண்டிருக்கின்றன.

அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சமீபத்தில் பிரியாமணியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் பலமுறை இவரை ரசித்துள்ளேன். சினிமா துறையில் இருக்கும் புத்திசாலித்தனமான, அற்புதமான சில நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். அவரின் அன்பு விசேஷமானது. உங்கள் அன்பு இந்த உலகத்தின் மீது இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்துவது போல் என்னை உணரவைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்ருதி ஹரிஹரன் தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்துவருகிறார். இப்படத்தை இயக்குநர் குருதத்தா ரீமேக் செய்துவருகிறார். சுதீப் தனுஷ் கேரக்டரில் நடிப்பதுடன் படத்தையும் தயாரிக்கிறார். ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் கன்னடத்தில் முன்னணி நடிகராக விளங்கும் அம்பரீஷ் நடிக்கிறார். ‘அம்பி நிங் வயசாய்தோ’ என்ற பெயரில் உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு துவங்கி காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.


Post a Comment

CAPTCHA
Refresh

*