டாப் ஹீரோக்களின் நாயகியாகும் நயன்..!!
வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். அதன் பிறகு கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவான மாயா, டோரா, அறம் உள்ளிட்ட படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவுடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக முன்னணி ஹீரோக்களின் படங்களைத் தவிர்த்து வந்தார். இதனால் பல படங்கள் கைவிட்டுப்போனது. இதையடுத்து தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்து வருகிறார்.
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் நயன்தாரா தற்போது சிவகார்த்திகேயனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த வேலைக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி கண்டதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து மீண்டும் சிவகார்த்தியுடன் இணைந்திருக்கிறார்.
தன்னுடய அத்தனை படங்களையும் முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கி, வெற்றிகண்டு வரும் ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.