ஆபாசம் இல்லாத மக்கள் சினிமா..!!

ஸ்ரியா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள அண்டாவ காணோம் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குநர் வேல்மதி இயக்கத்தில் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது அண்டாவ காணோம் திரைப்படம். வேல்மதி இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இருவருடங்களுக்கு முன்பே படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில் படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஒரு அண்டா தனது கதையை சொல்லும் விதமாக டீசர் வெளியாகியிருந்தது. அண்டாவிற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். ஸ்ரியா ரெட்டி சாந்தி என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் கதை நிகழும் தேனி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர். ஸ்ரியா ரெட்டியின் அண்டா தொலைந்து போவதையும் அதனால் நிகழும் சம்பவங்களையும் மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தேனி வட்டார மக்களின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டுத் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த சதிஷ் படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘ஏ’ சான்றிதழ் படங்களைப் பார்க்கும் ரசிகர்களும் பார்க்கலாம். ஆபாசமான காட்சிகள், வசனங்கள் இருக்காது என இருட்டு அறையில் முரட்டுகுத்து படத்தை மறைமுகமாக சாடி பதிவிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*