ஹாட்ரிக் வெற்றி கொடுக்குமா சீமராசா?..!!

இரண்டாவது முறையாக நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன் அவர் சீமராசா படத்தின் சில காட்சிகளுக்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சீமராசா. ஏற்கனவே இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த இரு படங்களும் வெற்றிப் படங்களாக அமைய இந்தப் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற களமிறங்கியுள்ளனர். சமந்தா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்கு முன்னரே சீமராசா படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் சில காட்சிகளின் படப்பிடிப்பு அப்போது விடுபட்டிருந்தது. தற்போது எஞ்சியுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பிற்காகப் படக் குழு முழு வீச்சில் தயாராகிக்கொண்டிருக்கிறது. குற்றாலம் பகுதியில் சண்டைக் காட்சிகளைச் சில நாள்கள் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் அது தற்போது தலக்கோணாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. அனல் அரசு சண்டைக் காட்சிகளை கவனிக்கிறார்.

மே 24ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. எஞ்சிய காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் பத்து நாள்கள் நடைபெறும். ஜூன் மாதத்திற்குள் முழுப் படப்பிடிப்பும் நிறைவடையும். டப்பிங் பணிகள் மே 15ஆம் தேதி தொடங்குகின்றன.


Post a Comment

CAPTCHA
Refresh

*