ரசிகைக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்..!!

தன்னிடம் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகை ஒருவருக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை பனையூரில் மே 5 மற்றும் 6ஆம் தேதி நடிகர் விஜய் நடத்திய மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் அலுவலகத்தில் திரண்டனர். வரவழைக்கப்பட்ட ஆறு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்த விஜய், கேரளாவைச் சேர்ந்த ரசிகர்களையும் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் கேரளாவைச் சேர்ந்த ரசிகை சரண்யாவும் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்தச் சந்தோஷத்தை தனது முகநூல் பக்கத்தில் சரண்யா பகிர்ந்துள்ளார். அதில், “விஜய் அண்ணாவின் முகம் என் மனதில் பதிந்துள்ளது. அவரைப் பார்க்கவோ, பேசவோ முடியாது என்று நினைத்தேன். எனக்கு எல்லோரையும்விட விஜய் அண்ணனைத் தான் மிகவும் பிடிக்கும். விஜய் அண்ணா மீது நான் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பலரும் என்னைக் கிண்டல் செய்தது உண்டு. நான் விஜய் அண்ணாவைப் பார்க்கவே முடியாது என்றார்கள். இதோ பார்த்துவிட்டேன். அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் உறைந்துவிட்டேன்.

பின்னர் உங்கள் கையைத் தொடலாமா என்று கேட்டேன். அவரும் சிரித்தபடியே கை கொடுத்தார். நான் உங்களைச் சந்திக்க பல நாள்கள் காத்திருந்தேன் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர், நமக்கான ரயில் வரும் வரை நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று சிரித்த முகத்துடன் தெரிவித்தார். பின்னர் கேமராவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார். அவருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்துக் கூற ரொம்ப நன்றிமா கண்டிப்பா சாப்பிட்டுப் போங்க என்றார். என் கனவு நிறைவேறிவிட்டதே” என்று தெரிவித்துள்ளார்


Post a Comment

CAPTCHA
Refresh

*