ஒரு வேளை நயன்தாராவாக இருந்தால்…!!

கோலமாவு கோகிலா (கோகோ) திரைப்படத்தின் ‘எது வரையோ’ பாடல் வெளியாகி யூட்யூபில் எட்டு லட்சம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் கவர் ஃபோட்டோ என கோகோ பாடலின் வீச்சு அதிகமாகவே பரவியிருக்கிறது.

அனிருத் – சாம்.சி.எஸ் கூட்டணியில் உருவான இந்தப் பாடல் ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் அடுத்த பாடலுக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறது படக் குழு. கோகோ படத்தின் அடுத்த பாடலாக ‘கல்யாண வயசு’ பாடலை மே 17ஆம் தேதி ரிலீஸ் செய்வதாகக் கூறியிருக்கின்றனர்.

அறிவிப்பை வெளியிட்ட அனிருத், இப்போதிருக்கும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதத்தில் ‘அறிமுகப் பாடலாசிரியர் எழுதியிருக்கும் பாடல். யார் என யூகிக்கமுடியுமா?’ எனக் கேட்டிருக்கிறார். இதனால் யார் அந்தப் பாடலாசிரியர் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியிருக்கிறது. ஒருவேளை நயன்தாராவாக இருக்குமோ என்ற சந்தேகம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்துவருகிறார்கள்.

இந்தச் சமூகம் விதித்து வைத்திருக்கும் திருமண வயதைத் தாண்டிய பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அழுத்தமாகப் பேசும் திரைப்படமாக கோகோ உருவாகிவருவதாகத் தெரிகிறது


Post a Comment

CAPTCHA
Refresh

*