இரும்புத்திரை: உருவான விதம்..!!

விஷால், அர்ஜுன் நடிப்பில் வெளியாகவிருக்கும் இரும்புத்திரை படத்தின் சண்டைக் காட்சி உருவான வீடியோ வெளியாகி உள்ளது.

விஷால், சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று (மே 11) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மிலிட்டரி மேனான விஷால் சமூகத்தில் நடக்கும் குற்றச்செயல்களைத் தண்டிப்பவராக நடித்திருக்கிறார். சைபர் க்ரைம் முறையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவராக அர்ஜுன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய காட்சியாகக் கருதப்படுவது விஷால் – அர்ஜுன் இருவருக்குமான மோதல் காட்சியாகும். எனவே, அந்த சண்டைக் காட்சிக்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விஷாலும் அர்ஜுனும் அந்த சண்டைக் காட்சியில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். “அர்ஜுன் சாருக்கும் எனக்கும் இருக்கும் சண்டைக் காட்சி படத்தின் முக்கியமான பகுதியாகும். நான் உதவி இயக்குநராக வேலை செய்த என் குருவே எனக்கு வில்லனாக நடித்திருப்பது மிகப்பெரிய விஷயம்” என விஷால் கூறியுள்ளார்.

அர்ஜுன் பேசுகையில், “விஷால் தயாரிக்கும் படம்னா அது என் படம் மாதிரி. எப்போவும் முதல் பட இயக்குநர்களின் படங்களில் நடிப்பதை விரும்புவேன். ஏனென்றால் வரும்போதே நெருப்பா இருப்பாங்க” என்று பேசியுள்ளார்.

விஷால், அர்ஜுன் இருவருக்குமான சண்டைக் காட்சி உருவான விதம் சார்ந்த வீடியோ படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கச் செய்திருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*