குற்றப்பின்னணியில் ‘ராட்சசன்..!!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘ராட்சசன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால், அமலா பால் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ராட்சசன். ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் இயக்கியிருக்கிறார். காளி வெங்கட், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ்காந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் அனைத்து பணிகளும் முடிவடைந்து தற்போது சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இதில், விஷ்ணு விஷால் காவல் துறை அதிகாரியாகவும், அமலா பால் ஆசிரியையாகவும் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில் பல்வேறு கொலை குற்றங்கள் பற்றிய செய்தித்தாள்கள் கட் செய்து அறை முழுவதும் நிறைந்திருக்க, காவல் துறை அதிகாரியாக துப்பாக்கியுடன் விஷ்ணு விஷால் நிற்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அதேசமயம் அவர் கையில் கிளாப் போர்டு இருப்பதால் வேறொரு பிம்பத்தையும் உண்டாக்குகிறது. இத்தகைய காரணங்களால் முழுக்க குற்றப்பின்னணியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கும் எனக் கருத முடிகிறது.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*