ரஜினி-ரஞ்சித்தின் ‘செம்ம வெயிட்டு’ காதல்

விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்திற்கு இசையமைப்பாளர் இமானை அழைத்து நடிகர் அஜித்குமார் பாராட்டியுள்ளார்.

சிவா-அஜித் கூட்டணியில் உருவாகிவரும் விஸ்வாசத்தின் படப்பிடிப்பு மே 7ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பில் அஜித், நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருவிழா போன்ற வண்ணமயமான செட்டில் பாடல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள டி. இமான், அஜித் படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறை. இந்தப் படத்துக்காக மூன்று பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இமான். இதைக் கேட்டு ரசித்த அஜித், இமானை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து ஹைதராபாத் சென்ற இமான், தனது பாடலுக்கு அஜித் நடனமாடுவதை ரசித்துப் பார்த்துள்ளார்.

பின்னர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இமான், “எனது பாடல் காட்சிப்படுத்தப்படுவதை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் இன்று அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது ட்யூனுக்கு எளிமையின் நாயகன் ரசித்து நடனம் ஆடுவதை ரசித்தேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*