சண்டக்கோழி 2: சென்டிமென்டில் ஒரு ஆக்‌ஷன்..!!

விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சண்டக்கோழி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஷால்-லிங்குசாமி கூட்டணியில் 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் சண்டக்கோழி. தற்போது அதே கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் சண்டக்கோழி 2 என்ற பெயரில் உருவாகிவருகிறது. முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வரலட்சுமி நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். விஷாலின் இரும்புத்திரை ரிலீஸான இதே தினத்தில் அவரின் அடுத்த படமான சண்டக்கோழி 2வின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

சண்டக்கோழி 2005ஆம் ஆண்டு வெளியானதால் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் பேசும் “இன்னைக்கும் இந்த அருவா பிடிக்கிற தெம்பு இருந்தால் வாடா…வந்து வெட்டுடா… நான் இங்கதாண்டா இருப்பேன்” வசனத்திலிருந்தே ட்ரெய்லர் ஆரம்பமாகிறது. அதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு நடைபெறும் நிகழ்வுகளை விவரிக்கும் கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் லிங்குசாமி. இதில் வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் காட்சிகள் விஷாலின் ‘திமிரு’ படத்தை பிரதிபலிக்கின்றன.

ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் என முழுக்க குடும்பப் பின்னணியில் உருவாகியிருக்கும் சண்டக்கோழி 2, விஷால்-லிங்குசாமி கூட்டணிக்கு வெற்றியைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*