அமலா பால்: வருத்தமும் மகிழ்ச்சியும்..!!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் மீண்டும் மீண்டும் தள்ளிப்போவது குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார் நடிகை அமலா பால்.

2017ஆம் ஆண்டு இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த அமலாபால், 2018ஆம் ஆண்டுக்கு அதிகம் நம்பியிருப்பது பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தைத்தான். ஜனவரியில் ரிலீஸாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தள்ளிப்போய்விட்டது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு ஹிட், கடைசியில் ஒரு ஹிட் என போடப்பட்ட கணக்கில் ஏற்பட்ட மாறுதல்கள் அமலா பால் வருத்தத்துக்குக் காரணம். இதனை மறைக்க முடியாமல் ட்விட்டரில் வெளிப்படுத்திவிட்டார்.

“பாஸ்கர் ஒரு ராஸ்கல் பிரிவ்யூ ஷோ பார்த்தபிறகு மே 11ஆம் தேதி மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்குமென்று கற்பனை செய்தேன். ஆனால், படத்தில் வேலை செய்த அனைவருக்கும் அது ஒரு மோசமான தினமாக மாறியிருக்கிறது. சில தெளிவில்லாத வழக்கத்துக்கு மாறான காரணங்களால் கடைசி நிமிடத்தில் அதன் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கூடிய விரைவில் ரசிகர்கள் இந்த குடும்பத் திரைப்படத்தை பார்க்க வேண்டும். மே மாதம் மேலும் சிறந்ததாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். மே 11ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ள மற்ற படங்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார் அமலா பால்.


Post a Comment

CAPTCHA
Refresh

*