2017 அதிகம் விரும்பப்பட்ட பெண்கள்..!!

இந்திய அளவில் அதிகம் விரும்பத்தக்க பெண்களின் பட்டியலில் நடிகை ஓவியா இடம்பெற்றுள்ளார்.

களவாணி படத்தின் மூலம் நடிகையாக பரவலாக அறியப்பட்டாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே அனைத்துத் தரப்பினராலும் அறியப்பட்ட முகமானார் ஓவியா. ஓவியா ஆர்மி என்று ஒரு அமைப்பு உருவாகும் அளவுக்குப் பிரபலமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினாலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தாலும் தேர்வு செய்து நடித்துவரும் ஓவியா, தொடர்ந்து தனது செயல்பட்டால் மக்களை தன் பக்கம் தக்கவைத்துள்ளார்.

இந்த நிலையில் டைம்ஸ் பத்திரிகை 2017ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பெண்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் நடிகை ஓவியாவுக்கு 28ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஷெல்லார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் முதல் முறையாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்த நடிகை தீபிகா படுகோன் இந்த முறை இரண்டாவது இடத்தையும், கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்த முறை மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார்.

எமி ஜாக்சன் 6ஆவது இடத்திலும் சன்னி லியோன் 8ஆவது இடத்திலும், கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த பிரியங்கா சோப்ரா இந்த முறை ஏழாவது இடத்திலும் உள்ளார். அதே போல் பூஜா ஹெக்டே 22ஆவது இடத்திலும், ராதிகா ஆப்தே 43ஆவது இடத்திலும், பார்வதி 50ஆவது இடத்திலும் உள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*