துபாயில் உருவாகும் சாஹோ..!!

பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் சாஹோ படத்தின் படப்பிடிப்பில் அருண் விஜய் இணைந்துள்ளார்.

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸுக்கு தெலுங்கு திரையுலகைக் கடந்து இந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரபாஸை கதாநாயகனாகக் கொண்டு படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சுஜித் இயக்கும் சாஹோ திரைப்படத்தில் ஷ்ரதா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ரொமான்டிக் – ஆக்‌ஷன் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்றுவருகிறது. நான்கு மொழிகளில் தயாராவதால் ஒவ்வொரு திரையுலகில் இருந்தும் முக்கியமான நடிகர்களை படத்தில் இணைத்துள்ளனர். தமிழ் திரையுலகில் இருந்து அருண்விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துபாயில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளதை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.

கத்தி படத்தில் நடித்து கவனம் பெற்ற நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி ஷெராப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்ச்ரேக்கர், மந்த்ரா பேடி, ஈவ்லின் ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷங்கர் – எல்சான் – ராய் மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. விரைவில் ட்ரெய்லர், இசை வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*