காக்கி ரூட்டில் பிரபு தேவா…!!
தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவரும் பிரபு தேவா, அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜாபக்ஸ் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் டிக் டிக் டிக். விண்வெளியை மையமாக வைத்து கதையமைக்கப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிறுவனம் தனது அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்த படத்தின் நாயகனாக நடிகர் பிரபு தேவா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
முகில் இயக்கும் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபு தேவா. மெர்க்குரி படத்தில் வித்தியாசமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தாலும், முதன்முறையாக தற்போதுதான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.