பிக் பாஸ் 2: நானி ஒப்பந்தம்..!!

தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை சில மாதங்களில் தொடங்குகிறது பிக் பாஸ் குழு. தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் வெர்ஷன் தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முக்கியமான காரணம், அதன் தொகுப்பாளர்.

தமிழில் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு இருந்த திறமையும், நேர்த்தியும் மற்ற மொழிகளில் இல்லை. இதனால் தமிழில் கமல்ஹாசனை மீண்டும் ஒப்பந்தம் செய்த பிக் பாஸ் குழு மற்ற மொழிகளில் மாற்றத்தைக் கொண்டுவருகின்றனர். அதன் முதல் முயற்சியாக தெலுங்கில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் முதல் சீசனில் தொகுத்து வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்-க்கு பதிலாக நடிகர் நானி இரண்டாவது சீசனுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் தென்னிந்திய மொழிகளில் பங்குபெறப்போகும் நபர்கள் யார் யார் என்பதில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. தமிழ், தெலுங்கு ஆகியவற்றுக்கான முகங்கள் இரு பக்கமும் பரிச்சயமானவர்களாக இருப்பதால், யாரை எந்த மொழி நிகழ்ச்சிக்கு தயார் செய்வது என்ற குழப்பத்திலும் பிக் பாஸ் டீம் இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*