தனுஷ் ஹாலிவுட் படம் தமிழில் ரிலீஸ்..!!

தனுஷ் நடித்துள்ள The Extraordinary Journey of The Fakir திரைப்படம் சமீபத்தில் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மே 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இத்திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கான் திரைப்பட விழாவுக்கு தனுஷ் சென்று போஸ்டர் ரிலீஸ் செய்கிறார் என்பது தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே பெருமையான ஒன்று. ஆனால், போஸ்டரை அவர் ரிலீஸ் செய்தபோது ஒரு ஆச்சரியம் கிடைத்தது. The Extraordinary Journey of The Fakir படத்தின் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு பதிப்பு மட்டுமின்றி தமிழிலும் ‘வாழ்க்கைய தேடி நானும் போறேன்’ என்ற போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே மே 30ஆம் தேதி மற்ற மொழிகளில் ரிலீஸாகும் இத்திரைப்படம், தமிழில் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் The Extraordinary Journey of The Fakir திரைப்படத்தின் தமிழ் வேலைகளைப் பற்றிய தகவல்களைக் கொடுத்துள்ளன.

வெளிநாடுகளில் ரிலீஸாகி முடித்த பின்னர், ஜூன் மாத இறுதியில் இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒன்றான Little Red Car Films நிறுவனம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*