100 படத்தில் அதர்வா ஜோடியான ஹன்சிகா..!!

விஜய், சூர்யாவுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த காலத்திலேயே, அப்போது வளரும் நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா. ஆனால் இப்போது படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

ஹன்சிகா புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதர்வாவை வைத்து `டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் `100′ என்ற படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார். இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார்.

100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இந்த படம் மூலம் அடுத்த ரவுண்டு வருவேன் என்று நண்பர்களிடம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் ஹன்சிகா.


Post a Comment

CAPTCHA
Refresh

*