ஹீரோயின் என்றால் அப்படி இருக்கணும் – அமைரா தஸ்தூர்..!!

அனேகன் படத்தில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இந்தியில் பிசியாக இருக்கும் அமைரா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் 3டி படத்தில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில்,

ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் தான் எனது ரோல்மாடல். இவங்க 2 பேருமே ஹீரோயின்கறதை தாண்டி சர்வதேச அளவுல இந்தியாவுக்கு ஒரு சினிமா அடையாளமாக திகழ்கிறார்கள். அதனால் இவர்களை மிகவும் பிடிக்கும். வித்யாபாலன் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் 2 விதமான படங்களிலுமே கலக்குகிறார். திருமணத்துக்கு பிறகு கூட 2 பேருக்கும் அவர்களின் புகழ் சிறிதுகூட குறையவில்லை. ஹீரோயின் என்றால் அப்படி இருக்கணும்.

அமீர் கான், ஹிருத்திக் ரோ‌ஷன். இரண்டு பேரின் படங்களையும் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (சொல்லும்போதே பரவசமடைகிறார்). யெஸ்… தனுஷ் கூட நடித்தாகிவிட்டது. அடுத்தது ரஜினி சார் உடன் நடிக்க வேண்டும். சின்ன வேடமாக இருந்தால் கூட பரவாயில்லை. விக்ரமையும் ரொம்ப பிடிக்கும். சேது படத்தை 5 முறை பார்த்துருக்கேன்.


Post a Comment

CAPTCHA
Refresh

*